Home / Astrology / இன்று தொட்டதெல்லாம் வெற்றியாவது எந்த ராசிக்கு தெரியுமா?

இன்று தொட்டதெல்லாம் வெற்றியாவது எந்த ராசிக்கு தெரியுமா?

உதவிகள் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். உயர்பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். நட்பு வட்டம் விரிவடையும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். அரைகுறையாக இருந்த கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள்.

ரிஷபம்
திறமைகள் பளிச்சிடும் நாள். அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். பிற இனத்தாரால் பெருமை சேரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

மிதுனம்
தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங் கும் வாய்ப்பு உண்டு. பணம் பல வழிகளிலும் வந்து கையை நிரப்பும். தொழில் வளர்ச்சி உண்டு.

கடகம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் துணிந்து செய்ய இயலாது. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

சிம்மம்
புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இருமடங்காகலாம். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

கன்னி
உத்தியோக மாற்றம் உறுதியாகும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்க வரும். மாற்றக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும்.

துலாம்
பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை இனம்புரியாத கவலைகள் தோன்றலாம். பிரச்சினைகளைச் சமாளிக்க நண்பர்கள் துணைபுரிவர்.

விருச்சிகம்
பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். பகல் இரவாகப் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும்.

தனுசு
தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. வருங்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலைகளைக் கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல் நலம் சீராகும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

மகரம்
வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.கட்டிடம் கட்டும் பணிக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.

கும்பம்
போன் மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர். தாய்வழி ஆதரவு உண்டு. வாகன மாற்றம் பற்றி சிந்தனை உருவாகும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

மீனம்
சகோதர சச்சரவுகள் அகலும் நாள். ஆதரவுக் கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுநல ஈடுபாட்டால் புகழ்பெறுவீர்கள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

Check Also

உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி?… உங்க ராசிக்கு ஏற்ற அதிர்ஷடம் என்னெனனெ தெரிஞ்சிக்கோங்க

ஒருவர் ஜாலியாக இருப்பதற்கும் அவர்களுடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *