Home / Astrology / உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி?… உங்க ராசிக்கு ஏற்ற அதிர்ஷடம் என்னெனனெ தெரிஞ்சிக்கோங்க

உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி?… உங்க ராசிக்கு ஏற்ற அதிர்ஷடம் என்னெனனெ தெரிஞ்சிக்கோங்க

ஒருவர் ஜாலியாக இருப்பதற்கும் அவர்களுடைய ராசிக்கும் கிரகங்களுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. சிலருக்கு அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காரணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில்

ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம். அந்த ஜோதிடத்தின் மூலம் நாம் வாழ்க்கையில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது என்பது வரை மிகத் தெளிவாக ஜோதிடத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

ஜோதிடம்
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம். இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அதனால் எந்த விஷயத்திலும் நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நமக்கு நிச்சயம் தான். நம்பிக்கை இல்லையென்றால் அதைப்பற்றி சிந்தித்து நம்முடைய நேரத்தைக் கடத்தக்கூடாது. ஒரு விஷயத்தின் மீதான நம்பிக்கைத்தன்மை அந்த விஷயத்தின் முழுமையை நமக்குப் புரிய வைக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி – 20 மார்ச்
உங்களுடைய திறமையான பேச்சுக்களுக்காக பிறரால் பாராட்டப்படுவீர்கள். உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்திடுங்கள். வெளிநாட்டுப் பயணங்கள் உங்களை பல சிக்கல்களில் இருந்து காப்பாற்றும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். பணியில் உடன் பணிபுரியும் சக ஊழியர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
அப்பாவழியிலான உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். வீடு, மனைகளுக்காக கொஞ்சம் சுப விரயச் செலவுகள் உண்டாகும் வாய்ப்பு உண்டு. கால்நடைகளிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஆன்மீக வழிபாட்டில் மனம் லயித்துப் போவீர்கள். கடல் வழிப் பயணங்களால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் – 20 ஜனவரி
உங்களுடைய தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் பண வரவுகள் ஏற்படும். உங்களுடைய சேமிப்பு கிடுகிடு வென உயர ஆரம்பிக்கும். பதவி உயர்வு உண்டாகும் இருக்கிறது. அதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் உள்ள கவலைகள் குறைவதற்கான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் மேன்மையான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
தொழிலில் பங்குதாரர்களுடைய உதவியினால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரிசெய்வதற்கான சில விரயச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டுக்கு எதிர்பாராத உறவினர்களுடைய வருகையினால் மனதில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
எந்த வேலை செய்தாலும் அதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் மற்றும் வெளியிட வேலைவாய்ப்புகள் ஏதேனும் வந்தால், அவற்றை சரியாக சிந்தித்து முடிவெடுங்கள். இதற்கு முன்பாக இழந்த முக்கிய பொருள்களை மீட்பதற்கான உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் பெருகும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பணிகள் சிறப்பாக நடைபெற்று முடிய சற்று கால தாமதமாகும். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரவிருக்கிற எண் 1 ஆகவும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சும் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் இருக்கப்போகிறது.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
உங்கள் வீட்டுக்குப் புதிய உறவினர்கள் வந்து சேருவார்கள். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்னைகளை உடனே தீர்க்க போதுமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தும் நாள். இன்று கிழக்கு திசை உங்களுக்கு அதிஷ்டம் தரும் திசையாகவும் 9 அதிர்ஷ்ட எண்ணாகவும் ஆரஞ்சு அதிர்ஷ்டம் தரும் நிறமாகவும் அமையும்.

சிம்மம்: 23 ஜூலை – 21 ஆகஸ்ட்
உங்கள் வீட்டுக்குப் புதிய உறவினர்கள் வந்து சேருவார்கள். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்னைகளை உடனே தீர்க்க போதுமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.திறமைகளை வெளிப்படுத்தும் நாள். இன்று கிழக்கு திசை உங்களுக்கு அதிஷ்டம் தரும் திசையாகவும் 9 அதிர்ஷ்ட எண்ணாகவும் ஆரஞ்சு அதிர்ஷ்டம் தரும் நிறமாகவும் அமையும்.

கடகம்: 22 ஜூன் – 22 ஜூலை
வீட்டில் வெகு நாளாக இருந்து வந்த பிரச்சினைக்கு வீட்டில் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசித்து ஒரு முடிவுககு வருவீர்கள். நண்பர்கள் மூலமாக சுப செய்திகள் வந்து சேரும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளில் பங்கு தாரர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர்ந்த சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு பாசன வசதியால் லாபம் உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான நாள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை – மேற்கு, அதிஷ்ட எண் – 9, அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு நிறம்.

ரிஷபம்: ஏப்ரல் 20 – மே 20
உடன் பிறந்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இதுவரை இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். குலதெய்வ வழிபாடு அவசியம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிஷ்ட திசை – தெற்கு, அதிஷ்ட எண் – 5, அதிர்ஷ்ட நிறம் – இளம்பச்சை.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
நண்பர்களின் மூலம் நிரந்தர வருமானத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் நிம்மதியடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை – மேற்கு, அதிஷ்ட எண் – 3, அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள் நிறம்.

Check Also

இன்று தொட்டதெல்லாம் வெற்றியாவது எந்த ராசிக்கு தெரியுமா?

உதவிகள் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். உயர்பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். நட்பு வட்டம் விரிவடையும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *