Home / Tamil News / வங்கிக் கணக்கில் பணம் இருப்பது தெரியாமல் பட்டினியால் பலியான சிறுமிகள்: இந்தியாவை உலுக்கிய பட்டினி சாவு!

வங்கிக் கணக்கில் பணம் இருப்பது தெரியாமல் பட்டினியால் பலியான சிறுமிகள்: இந்தியாவை உலுக்கிய பட்டினி சாவு!

புதுதில்லியில் பட்டினியால் உயிர்பலியான மூன்று சிறுமிகளில் ஒருவரது வங்கிக்கணக்கில் ரூ.1,800 இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டினியால் பலியாவது கொடும் துயரம். இந்தியாவில் ஆங்காங்கே கேட்கப்பட்டு வந்த பசி, பட்டினி என்ற வார்த்தைகள் தற்போது நிஜமாவே நடந்து உயிரை பறிக்கும் அரக்கனாக மாறிவிட்டது பெரும் சோகத்தை அளித்துள்ளது.

மான்ஷி (8), ஷிகா (4), பெரா (2) ஆகிய மூவரும் தான் பட்டினிக்குப் பலியாகி சிறுமிகள்.

இந்த சிறுமிகளின் தந்தை பெயர் மங்கள்சிங். தாய் பீனா. மங்கள் சிங் ரிக்‌ஷா தொழிலாளி.

புதுடெல்லி, மண்ணடவாலி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் வாடகை வீட்டில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

வீட்டின் சொந்தக்காரர் பிரதீப், நேற்று மங்கள்சிங் குடும்பத்தினர் இருந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, சிறுமிகள் சுயநினைவற்றுக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர்கள் பலியானது பட்டனிச்சாவல் என்ற அதிர்ச்சகரமாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சிறுமிகள் உணவு அருந்தி சுமார் 7 நாட்கள் இருக்கும். சிறுமிகளின் உடற்கூறாய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டது. வயிறு காய்ந்து போய் இருந்துள்ளது. சிறுமிகளுக்கு பல ஆண்டுகளாக ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டிருந்ததும் உடற்கூறாய்வில் கண்டறியப்பட்டது.

சுமார் 7 நாட்களாக சிறுமிகள் சாப்பிடாமல் இருந்ததற்கான காரணம் கேட்பவர்களை கண்கலங்கச் செய்துள்ளது.

அதாவது, சிறிது நாட்களுக்கு முன்னர் மங்கள்சிங்கின் ரிக்‌ஷா காணாமல்போய்விட்டதால். இதனால் கொஞ்சமாக கிடைத்துக் கொண்டிருந்த அரைவயிற்றுக் கஞ்சிக்கும் வழியில்லாமல் போனது.

மனஉலைச்சலுக்கு ஆளான மங்கள்சிங் தனது ரிக்‌ஷாவைக் கண்டுபிடிப்பதாகக் கூறிவிட்டு கடந்த சனிக்கிழமையன்று வீட்டை விட்டு சென்றுள்ளார்.

தந்தை மீண்டும் வரும்போது ஏதாவது வாங்கிவருவார் என்ற எண்ணத்தில் சிறுமிகளும் தாயும் கொலைபட்டினியாக கிடந்துள்ளனர்.

ஆனால், தந்தையும் வரவில்லை. உணவும் கிடைக்கவில்லை. காய்ந்த வயிற்றுடன் சிறுமிகள் சுயநினைவு இழக்கும் அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொலிசார் சிறுமிகளின் தாய் பீனாவிடம், குழந்தைகள் எப்படி இறந்தனர்? என்று போலீஸார் கேட்டபோது, முதலில் எனக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்கள்’ என்று போலீஸாரிடம் அவர் திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் போலீஸாரும் அந்த இடத்திலேயே கண்கலங்கியுள்ளனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, 8 வயதுச் சிறுமி மான்ஷியின் வங்கிக்கணக்கில் ரூ.1,800 பணம் இருந்தது தற்போது தான் தெரியவந்துள்ளது. மான்ஷி படித்துவந்த அரசுப் பள்ளியிலிருந்து சிறுமியின் பெயரில் இந்த வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு ஏ.டி.எம் கார்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசு, பள்ளி மாணவர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்கள், நோட்டுகள், யூனிஃபார்ம்கள் வாங்குவதற்கு அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கைத் தொடங்கி பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்துகிறது. இந்த விவரம்கூட தெரியாத சிறுமி தன் தங்கைகளையும் கூடவே கூட்டிச் சென்றுவிட்டார்.

இதை விட கொடுமையான விடயம் என்னவென்ரால், குழந்தைகள் இறந்துபோனது கூட தெரியாமல் மங்கள்சிங் இன்னும் காணாமல்போன ரிக்‌ஷாவையோ அல்லது புது வேலையையோ தேடி அலைந்துகொண்டிருக்கிறார். டெல்லி போலீஸாரும் அவரைத் தேடிவருகின்றனர்.

சிறுமிகளின் பட்டினிச்சாவு, டெல்லியை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையும் கண்கலங்கச் செய்துள்ளது.

ஒரு வேளை உணவு கூட கிடைக்காததால் சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் ஒவ்வொரு நாளும் நம்மில் பலரும் உணவை வீணடிக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

Check Also

கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் அளித்தவர் யார்? 10 சுவாரஸ்ய உண்மைகள்!

ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட முதல்வர். தமிழகத்தை மட்டுமல்ல தமிழையும் ஆண்டவர் கருணாநிதி. கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஒருவர் இவரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *