Home / Tamil News / ராதிகாவின் அழகின் இரகசியம் என்ன தெரியுமா? பாருங்கள்

ராதிகாவின் அழகின் இரகசியம் என்ன தெரியுமா? பாருங்கள்

தான் எப்பவும் சரியாத்தான் இருக்கிறேன்னு நினைக்கிற தன்னம்பிக்கைதான் நடிகை ராதிகா சரத்குமாரின் பெரிய ப்ளஸ்.. அவங்களோட அழகும் அதுதான்..’’ எப்போதுமே ஒரு அளவான புன்னகை! ‘புகழ்ச்சிக்கு மயங்குகிற ஆள் நான் இல்லை’ என்கிற அந்தப் புன்னகை உரக்கச் சொல்கிறது ‘ராதிகா அழகுதான்’ என்பதை!

அந்த அழகு எப்படி வந்தது என தெரியுமா…..

‘‘எ ன் கணவர் எப்பவுமே ரொம்ப ஹெல்த் கான்சியஸ். அவரோட சேர்ந்துதான் நானும் எக்சர்சைஸ் பண்ண ஆரம்பிச்சேன். என் பையன் பிறந்த பிறகு, நான் கொஞ்சம் வெய்ட் போட்டுட்டேன். ஆனா, போட்ட உடம்பைக் குறைச்சே ஆகணும்ங்கறதுல ரொம்ப கவனமா இருந்தேன். தினமும் 45 நிமிஷம் ‘ப்ரிஸ்க் வாக்’ (நல்லா வேகமா நடக்கணும்) போக ஆரம்பிச்சேன். உடல் தன்னால குறைஞ்சது.

வீ ட்டுல ஆயில் நிறைய உபயோகிக்க உபயோகிக்க, குடும்பத்தாரோட ஆயுள் குறைஞ்சுக்கிட்டே வருதுங்கறதை எப்பவும் ஞாபகத்துல வையுங்க. ஆயில் அதிகமா சேர்க்கறது அழகுக்கும் கேடுதான். எங்க வீட்டுல ஆயிலை விடவும் காய்கறிகளுக்கும் பழங்களுக்கும்தான் அதிகம் செலவு பண்றோம்.

ஷூ ட்டிங்கால சருமம் கருக்கறதுங்கறது எனக்கும் என் கண வருக்கும் அடிக்கடி நடக்கறது. அதுக்கு நாங்க செஞ்சுக்கற சிகிச்சை இதுதான்.. நல்லா புளிக்க வெச்ச தயிரை எடுத்து, வெயிலால கருத்துப்போன இடங்கள்ல தடவி, அது உலர்ந்ததும் சாதாரண தண்ணியால கழுவிட்டா, சருமம் பழைய நிறத்துக்கு வந்துடும்.

த லைமுடிக்குனு நான் ஸ்பெஷலா எதுவுமே செய்றதில்ல. தலைக்குக் குளிக்கறதுக்கு முன்னால நல்லா தேங்காய் எண்ணெய் வைப்பேன். சின்ன வயசுலருந்தே தலைக்கு ஒரே பிராண்ட் ஷாம்பூதான் உபயோகிக்கறேன். எந்தக் காரணத்துக்காகவும் ஷாம்பூ, சோப் பிராண்டுகளை மாத்த மாட்டேன்.

மு கத்துக்கு சோப் போடறதே இல்ல. ஃபேஸ்வாஷ்தான் உபயோகிக்கறேன். அதனாலதான் என் முகம் வறண்டும் போகாம, எண்ணெயும் வழியாம நார்மலா இருக்கு.

ஒ ரு விஷயம் சொன்னா நம்புவீங்களா? எனக்கு இப்போ வரைக்குமே புடவைகளோட வகை பத்தியெல்லாம் தெரியாது. பார்க்கறதுக்குப் பிடிச்சிருந்தா வாங்குவேன். அவ்வளவுதான். அதே மாதிரி நகையிலயும் சரி.. உடையிலயும் சரி.. புதுசு புதுசா ஃபேஷனா வர்றதையெல்லாம் போட்டுக்கணும்னு நினைக்க மாட்டேன். எனக்குப் பொருந்துறதை மட்டும்தான் போடுவேன். நம்ம வயசுக்கு ஏத்த மாதிரி நாம அலங்கரிச்சுக்கிட்டாலே, நாம அழகா மட்டும்தான் இருக்க முடியும்.

Check Also

கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் அளித்தவர் யார்? 10 சுவாரஸ்ய உண்மைகள்!

ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட முதல்வர். தமிழகத்தை மட்டுமல்ல தமிழையும் ஆண்டவர் கருணாநிதி. கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஒருவர் இவரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *