Home / Tamil News / பாகுபலி சூட்டிங்ல தமன்னா சாப்பிட்ட இந்த 6 பொருள்தான் அவங்க அழகுக்கு காரணமாம்

பாகுபலி சூட்டிங்ல தமன்னா சாப்பிட்ட இந்த 6 பொருள்தான் அவங்க அழகுக்கு காரணமாம்

துபாயை சேர்ந்த ராஷி சௌத்ரி புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர். ‘பாகுபலி’ தமன்னா பாட்டியா, ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸிப்பூர்’ ஹூமா குரேஷி ஆகியோருக்கு ஆலோசனை வழங்கக் கூடியவர். சரும பராமரிப்பு, உடல் எடை குறைப்பு, ஆரோக்கிய வாழ்வு, சமச்சீர் உணவு குறித்து ராஷி சௌத்ரி வழங்கும் ஆலோசனைகளை உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பல்வேறு ஊடகங்கள் மூலம் கவனித்து வருகின்றனர்.

மருந்து பக்கமெல்லாம் போக எனக்கு விருப்பமே இல்லைங்க… இயற்கை வழியில் சருமத்தை அழகாக பராமரிக்க ஏதாவது வழி இருக்கிறதா? என்று கேட்கிறீர்களா… அதற்கு ராஷி சௌத்ரி எளிமையான ஐந்து ஆலோசனைகளை கூறியுள்ளார்.

வைட்டமின் – சி
சருமத்தை நன்றாக பராமரிக்க மிகவும் அவசியமானது ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் வகை பழங்களில் காணப்படக்கூடிய ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் வைட்டமினான, வைட்டமின் சி ஆகும். தினமும் 2000 மில்லி கிராம் என்ற அளவில் வைட்டமின் சி எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பினால் மதியம் அல்லது இரவு உணவுக்குப் பின்னர், எஃபர்வெஸண்ட் மாத்திரையை தண்ணீருடன் எடுத்துக் கொள்ளலாம்.

குளூட்டோதையன்
நம் உடலில் உருவாக்கப்படும் அதிக ஆற்றல் வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்களில் ஒன்று குளூட்டோதையன். இது குளூட்டோமைன், கிளைஸின் மற்றும் சிஸ்டெய்ன் ஆகிய அமினோ அமிலங்களால் ஆனது. பல்வேறு உணவுகள் மூலம் உடலில் இந்த ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்டின் அளவினை நீங்கள் கூட்டிக்கொள்ள முடியும். ஆனால், இதை அதற்கான பிரத்யேக துணைஉணவு வடிவத்தில் உட்கொள்வது சிறந்தது. சப்ளிமெண்ட் என்னும் துணை உணவாக உட்கொள்ளும்போது 250 மில்லி கிராமுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது.

நெல்லிக்காய்
நெல்லிக்காயின் மருத்துவ குணம் நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு கிண்ணம் நிறைய நெல்லிக்காயை சாப்பிடுவது சருமத்தை பளபளப்பாக்கும். ப்ளூபெர்ரியும் சாப்பிடலாம். ப்ளூபெர்ரி உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல், நல்ல ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்டுகளை கூட்டுவதற்கு உதவும்.

மஞ்சள் தூள்
மஞ்சள், மருத்துவ குணங்கள் நிறைந்தது. மஞ்சளின் மகிமையை சமீபத்தில் மேலை நாடுகள் கண்டு அதிசயிக்கும் வரைக்கும் நாம் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டோம். சருமத்தை பளபளப்பாக, பிரகாசமாக மாற்றும் குணம் மஞ்சளுக்கு உண்டு. தினமும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலையில் கொஞ்சம் மஞ்சள்தூள் தனியாக எடுத்துக் கொள்வதும் நல்லது.

டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் இப்போது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றுதான். நீங்கள் சாப்பிடுவதில் 70 சதவீதம் டார்க் சாக்லேட் வகைகளாக இருப்பது நல்லது. கொக்கோ நிப்களை, ப்ளூ அல்லது ராஸ்பெர்ரிகளுடன் சேர்த்து ஒரு கிண்ணம் அளவு உண்ணலாம். வேறு ஸ்மூதி வகைகளுடனும் கொக்கோ நிப்களை சேர்த்துக்கொள்வது பயன் தரும்.

மச்சா டீ
காஃபிக்கு பதிலாக தினமும் மாலை மச்சா டீ பருகலாம். 10 தம்ளர் கிரீன் டீயில் உள்ள சத்து ஒரு கப் மச்சா டீயில் உள்ளது. ஆகவே, ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்டுகள் நிறைந்த மச்சா டீ பருகுங்கள். உங்கள் சருமம் ஜொலிக்கும்.

Check Also

கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் அளித்தவர் யார்? 10 சுவாரஸ்ய உண்மைகள்!

ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட முதல்வர். தமிழகத்தை மட்டுமல்ல தமிழையும் ஆண்டவர் கருணாநிதி. கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஒருவர் இவரை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *